Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு TNPSC Combined Technical Services Examination (Diploma / ITI Level)

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - TNPSC Combined Technical Services Examination (Diploma / ITI Level)

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்புக் கண்காணிப்பாளர், கணக் கெடுப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வலுநர் உட்பட 861 பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள்ளதாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 


🎓 கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐ.டி.ஐ /  மூன்றாண்டு டிப்ளமோ  படித்திருக்க வேண்டும். 

👵  

வயது வரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அதே பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதைகளுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

💰 விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 ஆன்லைன் மூலமாக  செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


✅ தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் பணிக்குரிய முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு 09.11.2024 அன்று நடைபெறுகிறது. தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்  கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

✔  தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு

🌐விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

📆  விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-09-2024 

📆  தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் நாள்: 09-11-2024 

📆  மற்ற தேர்வுகள் நடைபெறும் நாள்: 11-11-2024 முதல் 14-11-2024 வரை


👉மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் : https://www.tnpsc.gov.in/Document/english/CTSE_DIP_Eng_13.08.2024_.pdf

Post a Comment

0 Comments