Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read more
Support Staff Jobs
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read moreதமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது இந்த பணியிடங்களுக்கு நடைபெற இருந்த தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
![]() |
| சத்துணவு திட்டத் துறை பணிகளுக்கான நேர்காணல் நிறுத்தி வைப்பு காரணம் என்ன? |
சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நேர்காணல் மூலமாக நிரப்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற இருந்த நிலையில், இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோன நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.