Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Viluppuram District Panchayat Secretaries recruitment
Viluppuram District Panchayat Secretaries Recruitment 2020

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு நேரடி நியமனம் மூலமாக நிரப்ப தகுதியான விண்னப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 


விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சி செயலாளர்  காலிப் பணியிடங்கள் : 9


ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர் இனசுழற்சி (Rotation) மற்றும் இடஒதுக்கீடு (Turn) 

வ. எண்.

ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர்

இன சுழற்சி (Rotation)

இட ஒதுக்கீடு (Turn)

1.

பரனூர்

Most Backward Classes and Denotified Communities

-

2.

செம்மார்

Scheduled Castes (Arunthathiyars)

Women (DW)

3.

கோழிப்பட்டு

Scheduled Castes

(Arunthathiyars) (Women)

4.

திருநந்திபுரம்

Scheduled Caste

(Arunthathiyars on preferential basis)

5.

சேர்ந்தனூர்

Scheduled Caste

Women (DW)

6.

ஆலகிராமம்

General Turn

Women (DW)

7.

வில்வநத்தம்

Scheduled Castes

-

8.

இராஜம்புலியூர்

Most Backward Classes and Denotified Communities

-

9.

மானந்தல்

Backward Classes (Other than Backward Class Muslims)

Exservice men

விழுப்புரம் மாவட்ட கிராம  ஊராட்சி செயலாளர் பதவிக்கு சம்பளம் :

ஊராட்சி செயலாளர் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். 

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு (01.07.2020 அன்று) : 

  • பொதுப்பிரிவினர் - 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) / பிற்படுத்தப்பட்டோர்) - 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி : 

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் : 

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

3. ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்னப்பிக்க வேண்டும். 

4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும். 

5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.

6. அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். 


விருதுநகர் மாவட்ட கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து,   பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 22.10.2020 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.  


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


விருதுநகர் மாவட்ட கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2020 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள்

Villupuram District Panchayat Secretaries Recruitment 2020 Official Notification 

1.Mugaiyur 

2.Thiruvennainallur 

3.Kanai 

4.Vikravandi 

5.Koliyanur 

6.Mailam 

7.Vanur 

8.Vallam 

9.Melmalayanur 

Post a Comment

0 Comments