 |
விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு |
விருதுநகர் மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் / சமையலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலமாக தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. விருதுநகர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் 209 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 99 அமைப்பாளர் பணியிடமும், 110 சமையலர் பணியிடங்களும் காலியாக உள்ளது.
வ. எண். |
ஊராட்சி ஒன்றியம் / நகராட்சியின் பெயர் |
அமைப்பாளர் |
சமையலர் |
ஊராட்சி ஒன்றியம் |
1. |
இராசபாளையம் |
10 |
24 |
2. |
திருவில்லிபுத்தூர் |
10 |
8 |
3. |
வத்திராயிருப்பு |
8 |
3 |
4. |
சிவகாசி |
11 |
9 |
5. |
வெம்பக்கோட்டை |
6 |
18 |
6. |
சாத்தூர் |
5 |
1 |
7. |
விருதுநகர் |
10 |
11 |
8. |
அருப்புக்கோட்டை |
10 |
8 |
9. |
காரியாபட்டி |
15 |
13 |
10. |
திருச்சுழி |
7 |
9 |
11. |
நரிக்குடி |
5 |
6 |
நகராட்சி |
3. |
சிவகாசி |
1 |
0 |
4. |
சாத்தூர் |
1 |
0 |
மொத்தம் |
99 |
110 |
ஊதிய விகிதம் :
- சத்துணவு அமைப்பாளர் : ரூ. 7,700 முதல் 24,200 வரை
- சமையலர் : ரூ. 4,100 முதல் 12,500 வரை
அமைப்பாளர் பணிக்கான தகுதிகள் :
கல்வித்தகுதி :-
- பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- பழங்குடியினர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
சமையலர் பணிக்கான தகுதிகள் :
கல்வித்தகுதி:-
- பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவராக இருக்க வேண்டும்.
- பழங்குடியினர் எதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (25.09.2020 அன்றைய தேதி படி):-
- பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- பழங்குடியினர் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரப்பியிருக்க வேண்டும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் 21 வயது நிரம்பியவராகவும் 43 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
சத்துணவுத் திட்டத்தில் அனைத்து பணியிடங்களுக்கும் பெண்கள் மட்டுமே நியமனம் செய்ய அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்ட பள்ளி சத்துணவு மைய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2020
மேலும் விருதுநகர் மாவட்ட பள்ளி சத்துணவு மைய வேலைவாய்ப்புக்கான விவரங்களை தெரிந்துக்கொள்ள இந்த
லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.