எழுதப் படிக்க தெரிந்தால் போதும் பேரூராட்சி அலுவலகத்தில் வேலை | கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு | நிரந்தர அரசு வேலை
Esha TipsJuly 22, 20200
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தூய்மை பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியாக இருக்கும் பணியிடம் :
தூய்மை பணியாளர் - 5 காலிப்பணியிடங்கள்
ஊதிய விகிதம் :
ரூ. 15,700 - 50,000/- வரை
கல்வித்தகுதி :
எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது.
இதர தகுதிகள் :
உரிய உடற்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் : 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக பொது பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர்கள் 32 வயது வரையும், ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தவர்கள் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
விண்ணப்பிப்பது எப்படி?
தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி மற்றும் இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பத்தை பதிவஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்பட வேண்டும். நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
செயல் அலுவலர்,
தேர்வுநிலை பேரூராட்சி,
தேன்கனிக்கோட்டை அஞ்சல் - 635 107.
கிருஷ்ணகிரி மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
24.07.2020 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.00 மணிக்குள்