செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடத்துக்கு தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 |
| Chengalpattu District TNAHD Job Notification |
காலியாக இருக்கும் பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர் : 03 காலிப்பணியிடங்கள்
காலிப்பணியிட ஒதுக்கீடு :
- GT (Priority) - 01
- SC(A) (Priority) Women - 01
- MBC & DC (Priority - 01
கல்வி மற்றும் பிற தகுதிகள் :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விகிதம் :
Level - I ஊதியமான ரூ. 15,700 முதல் 50,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு :
- 01.07.2019 அன்றுள்ளபடி குறைந்தபட்ச வயது 18 நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பினர் ஆகியோர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகியோர் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- மாற்று திறநாளிகளுக்கு உச்ச வயது வரம்பில் 10 வருடம் கூடுதலாக வழங்கப்படும்.
- மேலும் வயது வரம்பு தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிப்பது எப்படி :
விண்ணப்பங்களை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் சிட்லபாக்கம் கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் இலவசமாக நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை
http://www.kancheepuram.nic.in என்ற இணையதள முகவரியில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை தபால் மூலம் பெற விரும்புவோர் சுயவிலாசமிட்ட ரூ.5/-க்கான அஞ்சல்வில்லை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
ஆஸ்பிட்டல் ரோடு,
காஞ்சிபுரம் - 631 502.
முக்கிய குறிப்பு :
- விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதாரத்தின் நகலை இணைத்திட வேண்டும்.
- விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின்மீது பெரிய எழுத்துக்களில் தவறாது குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள்