தமிழ்நாடு அரசு கால்நடை ஆய்வாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு | 583 காலிப்பணியிடங்கள் | +2 தகுதிக்கான வேலைவாய்ப்பு
Esha TipsDecember 11, 20190
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் : 583 கால்நடை ஆய்வாளர் நிலை - II
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி : கால்நடை ஆய்வாளர் பயிற்சி 11 மாத காலம் நடைபெறும், பயிற்சி முடித்த பின்னர் கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணி நியமனம் வழங்கப்படும்.
சம்பளம் : பயிற்சியின் போது எந்தவிதமான ஊதியமோ, உதவிதொகையோ வழங்கப்படமாட்டாது.
வயது வரம்பு : 01.07.2019 அன்றைய தேதிப்படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக பொது பிரிவினர் 18 வயதும், மற்ற பிரிவை சார்ந்தவர்கள் 46 வயதுவரையும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம் : ரூ. 100/- டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் திருநங்கைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டாம். டி.டி. "The Director, Animal Husbandry and Veterinary Services, Chennai - 35” என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? : விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள்,
எண். 571, அண்ணாசாலை, நந்தவனம்,
சென்னை - 35.
விண்ணப்பம் சென்று சேர கடைசி நாள் : 20.12.2019
அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் : https://cms.tn.gov.in/sites/default/files/job/LI_notification_021219.pdf